சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் காப்பீடு தொடர்பாக பெருகி வரும் வாய்ப்புகள் குறித்த பயிற்சித் திட்டத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ஆறுமுகம் பங்கேற்று பயிற்சித் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
புதுச்சேரி - இந்திய காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - பயிற்சி இயக்ககம் சார்பில் இந்தப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் எதிர்காலத்தில் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும். இயற்கை இடர்பாடுகளிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை வேளாண் மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும் என்றார் அவர்.
வேளாண் புல முதல்வர்
எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினார். தேசிய காப்பீடு நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் எஸ்.செழியன் சிறப்புரையாற்றினார். புதுச்சேரி காப்பீடு நிறுவன கெüரவ செயலர் கே.நாராயணசாமி, சிதம்பரம் கிளை நியு இந்தியா இன்ஸ்யூரள்ஸ் நிறுவனத்தின் முதுநிலை கிளை மேலாளர் ஆர்.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். திட்ட இயக்குநர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனுவாசன் நன்றி கூறினார்.
நேஷ்னல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தூத்துக்குடி கிளை முதுநிலை மண்டல மேலாளர் கே.நாகராஜன், வேளாண் காப்பீடு துறை அதிகாரிகள் சுரேஷ்குமார், செல்வநாதன், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பயிர்க் காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.