மலிவு விலை மருந்தகம் திறப்பு
நெய்வேலி, செவ்வாய் சந்தை அருகே அமைக்கப்பட்ட "அம்ரித்' என்ற மருந்தகத்தை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் விக்ரமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.


நெய்வேலி, செவ்வாய் சந்தை அருகே அமைக்கப்பட்ட "அம்ரித்' என்ற மருந்தகத்தை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் விக்ரமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
ஏழை - எளிய மக்களுக்கு மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் விதமாக மத்திய அரசின் "பிரதான் மந்திரி ஜன் ஒளஷதி' என்ற திட்டத்தின் கீழ் "அம்ரித்' என்ற மருந்துக் கடைகள் நாடெங்கிலும் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நெய்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பயனடையும் வகையில், நெய்வேலி, வட்டம்-13, செவ்வாய் சந்தை அருகே அமைத்துள்ள மருந்தகத்தை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குமர் ஆர்.விக்ரமன் திறந்து வைத்தார். ஹெச்எல்எல் நிறுவன துணைத் தலைவர் எஸ்.பிரதீப், நகர நிர்வாகத் துறை தலைமைப் பொது மேலாளர் எம்.கார்த்திகேயன், என்எல்சி இந்தியா பொது மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளர் எம்.ரஜினி, நிறுவன உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...