ரோட்டரி சங்கக் கூட்டம்
பண்ருட்டி ரோட்டரி சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கக் கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


பண்ருட்டி ரோட்டரி சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கக் கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்துப் பேசினார். பொருளாளர் என்.டி.ரவிசேகர், துணை ஆளுநர் மதன்சந்த், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கண் தானம் வழங்கிய மூன்று குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தோட்டக்கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஆட்சியரிடம் விருது பெற்ற என்.டி.ரவிசேகர், சென்னையில் நடைபெற்ற வர்த்தகர் சங்க மாநாட்டில் வ.உ.சி. வணிகச் செம்மல் விருது பெற்ற தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் ஆகியோரை பாராட்டி கெளரவித்தனர்.
நிகழ்வில், ரோட்டரி சங்க இணைச் செயலர் கெளரிசங்கர், அமிர்தராஜ், வீரப்பன், எஸ்.மோகன்குமார், சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...