ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச் சான்று மதிப்பீடு பணி

வடலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய தரச் சான்று மதிப்பீடு பணி அண்மையில் நடைபெற்றது.வடலூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :14 மே 2018, 10:50 pm

DIN

வடலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய தரச் சான்று மதிப்பீடு பணி அண்மையில் நடைபெற்றது.
வடலூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 42 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடின்றி தரமான, பாதுகாப்பான நிகழ்கால மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பொருட்டு தேசிய தரச் சான்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1,796 ஆரம்ப சுகாதார நிலையங்களில், வடலூர் உள்பட 6 ஆரம்ப சுகதார நிலையங்கள் தேசிய தரச் சான்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மே 10 முதல் 12-ஆம் தேதி வரை தேசிய தரச்சான்றுக்கான வெளி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் நியமனம் செய்யப்பட்ட மேற்கு திரிபுரா மாநிலத்தின் பொது சுகாதார மருத்துவர் தீப்குமார் டெபார்மா, லக்னோ பொது சுகாதார வல்லுநர் நவ்நீத் ரஞ்சன் ஆகியோர் வெளிமதிப்பீடு செய்தனர்.
மதிப்பீட்டு பணியில் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் ஹபீஸா, கடலூர் மாவட்ட தேசிய சுகாதாரத் திட்ட உதவி திட்ட அலுவலர் கெளதமன் , வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜா.ரூபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதி நாள் மதிப்பீட்டின்போது, மதிப்பீட்டாளர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.