கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 

Updated On :21 மே 2018, 2:49 am

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 
 பெண்ணாடத்தை அடுத்த தொளார் கிராமம், பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகிலுள்ள மணிவாசகம், சுப்பிரமணியன், செல்லம்மாள், லோகநாதன், பிச்சைபிள்ளை, மகேஸ்வரி, மாயவேல் ஆகியோரது வீடுகளிலும் தீ பரவியது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. 
 இதுகுறித்து தகவலறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் பாலமுருகன், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.  அப்போது, மாவட்ட அவைத் தலைவர் கலையரசன், பேரவை மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலர் ரத்தினசபாபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.