கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே திருமணமான பெண் தனது காதலருடன் முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
கடலூர் கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் ராம்குமார் (22). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தேவநாதன் மகள் தேவஸ்ரீ(19). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தேவஸ்ரீக்கும், என்.கீரப்பாளையத்தைச் சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கும் கடந்த செப்.1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுமார் 10 நாள்கள் கணவருடன் இருந்த தேவஸ்ரீ, திடீரென தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயமானார். இதுகுறித்து சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் ராம்குமார், தேவஸ்ரீயுடன் மேற்கிருப்பு கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி ஜெயகாந்தி வீட்டுக்கு வந்தாராம். ராம்குமாரின் மாமா சிவா அந்தப் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உரமிட சென்ற போது, அங்கு மரத்தில் ராம்குமாரும், தேவஸ்ரீயும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸார் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









