மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வானமாதேவியில் 19 மி.மீ. மழை

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழை பெய்தது. வானமாதேவியில் 19 மி.மீ. மழை பதிவானது.

Updated On :5 நவம்பர் 2018, 8:47 am IST

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழை பெய்தது. வானமாதேவியில் 19 மி.மீ. மழை பதிவானது.
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சில இடங்களில் பலத்த மழையும் மற்ற இடங்களில் பரவலாக மழையும் தொடர்ந்து பதிவாகி வருகிறது. கடலூரில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது.
 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: வானமாதேவி 19, குறிஞ்சிப்பாடி 13.4, லக்கூர் 12.4, வேப்பூர் 11, கொத்தவாச்சேரி 10, காட்டுமயிலூர் 8, குடிதாங்கி, வடக்குத்து தலா 6, பண்ருட்டி, லால்பேட்டை தலா 5, பெலாந்துறை 4.6, காட்டுமன்னார்கோவில் 4, கீழச்செருவாய் 3, அண்ணாமலைநகர், புவனகிரி, கடலூர் தலா 1.
 இந்த நிலையில் நவ.10-ஆம் தேதி வரை பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும், இருப்பினும் கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை தொடர்வதாகவும் கடலூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.