புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

நடராஜர் கோயிலில் இன்று சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:15 am

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.
 இதுகுறித்து சிவா சமேக்ஷா சமிதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வாசு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்சங்கம் நிகழ்ச்சி வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரமண சரண தீர்த்தர் நுச்சூர் வெங்கட்ராமன் பங்கேற்று பிரபாஷனம் மற்றும் சிவானுபாவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். தினமும் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரங்கசாமி தீட்சிதர், ஸ்ரீதர் சர்மா, திருவையாறு ரமணா சர்மா ஆகியோர் பங்கேற்று சத்சங்கம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.