
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு, கல்லூரி முதல்வர் வி.ராம்நாத் தலைமை வகித்தார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், செயலர் டி.ராஜாமணி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் பி.மணிவண்ணன் வரவேற்றார்.
மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பா.மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் ஏ.ஹேமலதா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கு.சாய்ராபானு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பி.நிர்மலா, எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமில், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். கள விழிப்புணர்வு உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





