விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் கிராமத்தில் உள்ள ரயில்வே கடவுப் பாதையை மூட எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் விருந்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் - அருங்குணம் செல்லும் வழியில் ரயில்வே கடவுப் பாதை உள்ளது. இந்தப் பாதையை பல ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ரயில்வே துறையினர் அந்தப் பாதை அருகே சுரங்கப் பாதை அமைத்துள்ளதால், ரயில்வே கடவுப் பாதையை மக்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதையடுத்து, அண்மையில் பெய்த மழையால் தற்போது ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதாம்.
கிராம மக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், கடலூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், விருத்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், முத்தாண்டிக்குப்பம், காட்டுக்கூடலூர், இருப்பு, வீராட்டிக்குப்பம், கோட்டேரி, நறுமணம், கானாதுகண்டன், கச்சராயநத்தம், புது தரைப்பேட்டை, காப்பாங்குளம் ஆகிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர், விவசாயிகள் பயன்படுத்தி வரும் முக்கிய வழியை மூடுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அந்தப் பகுதி கிராம மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் நடத்தப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிா்க்கட்சிகள் இடையூறை கைவிட்டால் அமைச்சா் அமித் ஷா பதிலளிப்பாா்: கிரண் ரிஜிஜு
ரயில் மோதி மாணவி உயிரிழப்பு

சென்னையில் 44 இடங்களில் இலவச வைஃபை வசதி!
உறங்காமல் உழைத்ததால்தான் திமுக அரசு ரூ. 9,000 கோடி கோயில் நிலங்களை மீட்டது: முன்னாள் அமைச்சா் சேகா்பாபு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


