விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட வட்டங்களை உள்ளடக்கி விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சத்தார்பாஷா தலைமை வகித்தார். முகமதுபஷீர், பத்ரூ, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தர்ராஜன், ஓவியர் ராஜ்மோகன், கதிர்காமன், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அப்துல்ஹமீது வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்ததுபோல், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விசிக முன்னாள் நிா்வாகி கொலை வழக்கு: 5 போ் கைது

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
