வடலூர் மற்றும் நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்புப் பேரவையினர் இணைந்து நடத்திய நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் வடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு குழுத் தலைவர் கோவி.கல்விராயர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பி.பாலாஜி வரவேற்றார். நுகர்வோர் சங்க நிர்வாகிகள் டி.சந்திரசேகரன், எஸ்.கோபு, ஏ.ராமச்சந்திரன், ஏ.கே.அந்தோணிசாமி, ஏ.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புவனகிரி பி.நல்லதம்பி, குறிஞ்சிப்பாடி சி.சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நுகர்வோர் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன், நெய்வேலி நுகர்வோர் சங்கத் தலைவர் எம்.தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடலூர் வாரச் சந்தையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்கள், வணிகர்களிடம் வழங்கினர்.
நுகர்வோர் சங்கம் ஜானகிராமன், ஞானமணி, பழனி, விக்டர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பி.உன்னிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பின்னர், வடலூர் வாரச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பச்சை வண்ணம் பூசப்பட்ட பட்டாணி விற்பனை, நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் விற்பனையை கண்டறிந்து எச்சரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


