ஆசிரியர்களின் போராட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தக் கூட்டமைப்பில் ஆசிரியர் கூட்டணியினர் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்களைவிட தீவிரமாக ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதால், கிராமப்புற மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,234 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்த வரையில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 65 சதவீதம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைப் பொருத்த வரையில், 12 சதவீதம் பேர் மட்டுமே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், 292 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கப் பள்ளிகளைப் பொருத்தவரையில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாவட்டத்தில் சுமார் 1,600 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் கணிசமாக உள்ளன. தற்போதைய போராட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்களில் 91 சதவீதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சுமார் ஆயிரம் பள்ளிகள் வரை முழுமையாக இயங்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர் ஆகியோர் பள்ளிகளைத் திறந்து வைத்து மாணவர்களை வெளியில் விடாமல் கவனித்து கொண்டனர். அவர்களும் மதிய உணவுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், மாணவர்களும் கல்வி கற்க முடியாமல் வீடு திரும்பினர். அதே நேரம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகள் முழுமையாக இயங்கின.
இதுகுறித்து, குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "கிராமப்புறத்தில் அதிகமாக அரசுப் பள்ளிகளே செயல்படுகின்றன. மேலும், தனியார் பள்ளிகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து சேர்க்க முடியாத ஏழைகளே அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், எங்களைப் போன்றவர்களின் ஏழைக் குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, பணிக்குத் திரும்ப முன்வர வேண்டும்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

