சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்ற வலியுறுத்தி, தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் சென்னையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: சிதம்பரம் நகராட்சியில் தற்போது உள்ள பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் (1978) கட்டப்பட்டது. இங்குள்ள 63 கடைகள், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் மூலம் வருவாய் வருகிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு தினமும் சுமார் 300 பேருந்துகளும், சுமார் 15,000 பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தற்போதுள்ள பழைய பேருந்து நிலையக் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தின் சேதமடைந்த பகுதிகள் இடிந்து விழுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டின் பழைமைவாய்ந்த நகராட்சிகளில் ஒன்றும், சிறந்த சுற்றுலா, ஆன்மிக தலமாகவும், மக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகவும் உள்ள சிதம்பரத்தில் பழைய பேருந்து நிலையத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்துத் தரவேண்டும் என அந்த மனுவில் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் அருண்மொழிதேவன் எம்பி, பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


