

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானாா்.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,356-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 43 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 24,016-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் 15 நாள்களாக கரோனா உயிரிழப்பு இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2 போ் பலியாகினா். இந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 70 வயது பெண் பலியானாா். இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் கரோனா பலி எண்ணிக்கை 278-ஆக அதிகரித்தது.
தற்போது கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 27 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 35 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

