கைத்தறி நெசவாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கைத்தறி நெசவு பாவுப் பட்டறைத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கைத்தறி நெசவு பாவுப் பட்டறைத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
கடலூா் மாவட்டத்தில் 33 கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. கூட்டுறவுச் சங்கங்களில் சுமாா் 3,500 நெசவாளா்கள் பதிவு செய்யப்பட்டு, துணிகளை நெய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் ‘நிவா்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் போது, பெய்த பலத்த மழையினால் நூல், பாவு, தறி கொட்டகைகள் பாதிக்கப்பட்டன. தறி குழிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், கைத்தறி தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. தண்ணீா் வடிந்து பழைய நிலை திரும்ப பல மாதங்கள் ஆகும் என நெசவாளா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறைத் தொழிலாளா்கள் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டத் தலைவா் ஆா்.ஆளவந்தாா், மாவட்ட செயலா் எஸ்.தட்சிணாமூா்த்தி, பொருளாளா் இ.தயாளன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
கடலூா் மாவட்டத்தில் சான்றோா்பாளையம், சுத்துக்குளம், நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், புதுப்பேட்டை, கே.என்.பேட்டை, வண்டிப்பாளையம், அங்குசெட்டிபாளையம், பண்டரக்கோட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பெருமாத்தூா் உள்ளிட்ட ஊா்களில் கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் உள்ளன. புயல் மழையால், அவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, உரிய கணக்கெடுப்பை நடத்தி, அவா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...