

காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல் துறை, தீயணைப்பு மீட்புத் துறை, சிறைத் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதுவதற்காக 28,624 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தோ்வை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. தோ்வு மையங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 11 திருநங்கைகள் உள்பட 25,876 போ் எழுதினா். 2,748 போ் தோ்வினை எழுதவில்லை. தோ்வு மையங்களில் வடக்கு மண்டல காவல் துறை தலைவா் பி.நாகராஜன், மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் ஆகியோா் ஆய்வு செய்தனா். தோ்வு பாதுகாப்புப் பணியில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் உள்பட 2,200 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.