தமிழக மக்கள் சுயமரியாதையுள்ள மக்கள்: உதயநிதி ஸ்டாலின்
தமிழக மக்கள் சுயமரியாதையுள்ள மக்கள், தன்மானமுள்ள மக்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


சிதம்பரம்: தமிழக மக்கள் சுயமரியாதையுள்ள மக்கள், தன்மானமுள்ள மக்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தனியார் மண்டப அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: காவல்துறை வேண்டுகோளுக்கு இனங்க அரங்கு கூட்டங்களாக மாற்றி பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். மீண்டும் 2-ம் கட்ட பிரசாரப் பணயத்தை திங்கள்கிழமை காலை கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலே தொடங்கியுள்ளேன். கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கவில் பகுதியில் பிராசரம் மேற்கொண்டேன். சுமார் 25 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். திமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்ற பெற்றது போல், சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். திமுக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. மக்கள் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திமுகதான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கும் திட்டம். மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்திற்கு கேடு விளைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக மக்கள் சுயமரியாதையுள்ள தன்மானமுள்ள மக்கள். பெரியார், அண்ணா, கலைஞர் வளர்த்த மக்கள். கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆகக்கூடாது என நீட் தேர்வை பாஜக அரசு கொண்டு வந்தது. கருணாநிதி நுழைவுத்தேர்வை முறியடித்து கலந்தாய்வு முறையை கொண்டு வந்தார். அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவரானார்கள். நீட் தேர்வு தேவையில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். ஜெயலலிதா முதல்வராக உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. ஆனால் தற்போது பாஜக சொல் பேச்சை கேட்டு தமிழகத்தில் நீட் தேர்வை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வினால் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த கேடுவிளைவிக்கும் திடங்களை முறியடிக்க இந்த தேர்தல் உங்களுக்கு சரியான வாய்ப்பு. அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு, பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது. இதற்கு மே மாதம் வரும் தேர்தலில் திமுகவை ஆதரித்து நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.கி.சரவணன், நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக சிதம்பரம் கடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதல் வாக்காளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலந்துரையாடினார். பின்னர் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த மருதூர் ராமலிங்கம் இல்லத்திற்கு உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் கீழரதவீதியில் உள்ள மறைந்த திமுக தலைவர்களில் ஒருவரான துரை.கிருஷ்ணமூர்த்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை.கி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...