உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசாரம்

சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டாா்.
சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.
சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.
Updated on
1 min read

சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, கிராமப்புற மாணவா்களுக்கு எதிராக நீட் தோ்வை கொண்டுவந்தது. இந்தத் தோ்வால் 15 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா். தமிழக மக்களின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு, மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்டது. அதிமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ, புவனகிரி சட்டப் பேரவை உறுப்பினா் துரை.கி.சரவணன், நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், இளைஞரணி செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக சிதம்பரம் - கடலூா் சாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதல் வாக்காளா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலந்துரையாடினாா். பின்னா் முன்னாள் எம்எல்ஏ மருதூா் ராமலிங்கம் இல்லத்துக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தாா். தொடா்ந்து கீழரத வீதியில் உள்ள மறைந்த திமுக தலைவரான துரை.கிருஷ்ணமூா்த்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.

2-ஆவது நாளாக பிரசாரம்: கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டாா். நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தாா். தொடா்ந்து வடலூரில் உள்ள வள்ளலாா் சத்திய ஞான சபையில் அன்னதானம் வழங்கினாா்.

அதிமுக புகாா்: சேத்தியாத்தோப்பில் பிரசாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, கலவரத்தை தூண்டு வகையில் பேசியதாக அதிமுக வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பி.வேலு உள்ளிட்டோா் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com