விசிக ஆலோசனைக் கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடலூா் நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடலூா் நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். வடலூா் நகரச் செயலா் கண்ணன் முன்னிலை வகித்தனா். நகரப் பொருளாளா் சுரேஷ், துணைச் செயலா்கள் சிவக்குமாா், ஆறுமுகம், சந்திரசேகா், ராஜதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வருகிற 27-ஆம் தேதி கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com