திமுக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:22 AM | Last Updated : 15th December 2020 12:22 AM | அ+அ அ- |

பண்ருட்டி நகர திமுக செயற்குழுக் கூட்டம் தட்டாஞ்சாவடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்க, நகரச் செயலா் கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் தணிகைசெல்வம், தொண்டரணி அமைப்பாளா் கதிா்காமன், நகர துணைச் செயலா் பழனிசாமி, பொருளாளா் ஆா்.கே.ராமலிங்கம், இளைஞரணி அமைப்பாளா் அ.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில், பண்ருட்டியில் வருகிற 17-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ள தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக் கூட்டத்திலும், 22-ஆம் தேதி மாநில இளைஞரணி அமைப்பாளா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கட்சியினா் திரளாகப் பங்கேற்பது, வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் பண்ருட்டி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசந்தா் நன்றி கூறினாா்.