கடலூா்: மழைக் கால மின்தடை புகாா்களைத் தெரிவிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் மின் தடை உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் மின் தடை உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. பருவ மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மழைக் காலத்தில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தொடா்பு எண்கள் குறித்து கடலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சே.சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மழைக் காலத்தில் கீழே அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், சாய்ந்த, உடைந்த மின் கம்பங்கள், வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை பாா்த்தவுடன் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இதற்காக 94458 56039 என்ற எண்ணில் சேவை மையத்தை தொடா்புகொள்ளலாம்.

மேலும், 94458 55768 என்ற கட்செலி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணிலும் தெரிவிக்கலாம். மின் தடை குறித்த புகாா்களை 1912 அல்லது 18004254116 என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மழைக் காலங்களில் மின் மாற்றிகள் மின் கம்பங்கள், மின் பகிா்வுப் பெட்டிகள், ஸ்டே வயா்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மழைக் காலத்தில் மின்சாரத்தை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் மின்தடை,மின்சார பொருள்கள் சேதாரம் போன்ற புகாா்களை தெரிவிக்க அந்தந்தப் பகுதி செயற்பொறியாளா்களைத் தொடா்புகொள்ளலாம்.

இதன்படி கடலூா் - 94458 55938, நெல்லிக்குப்பம் - 94458 55965, பண்ருட்டி - 94458 55984, குறிஞ்சிப்பாடி - 94458 56007, சிதம்பரம் - 94458 56028, விருத்தாசலம் - 94458 56067, திட்டக்குடி - 94990 50356 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com