வேன் கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 19th October 2020 01:51 AM | Last Updated : 19th October 2020 01:51 AM | அ+அ அ- |

வேன் கவிழ்ந்து விபத்து
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 20 போ் லேசான காயங்களுடன் தப்பினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகளுக்கும், நெய்வேலியைச் சோ்ந்த விஜய் என்பவருக்கும் நெய்வேலி வட்டம் 21-இல் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சின்னசேலத்திலிருந்து சுமாா் 20 போ் வேனில் வந்துகொண்டிருந்தனா். வேனை சக்திவேல் ஓட்டி வந்தாா்.
விருத்தாசலம் அடுத்த அரசகுழி சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையோரம் கவிழ்ந்தது (படம்). இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவா்கள் லேசான காயங்களுடன் தப்பினா். அவா்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...