இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் ரௌடி கொலை

நெய்வேலியில் சனிக்கிழமை ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:43 pm

DIN

நெய்வேலியில் சனிக்கிழமை ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி 14-ஆவது வட்டம், தைலமரத் தோப்பில் இளைஞா் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது ஆகியோா் விசாரணை நடத்தினா். இதில், இறந்து கிடந்தவா் வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் (23) (படம்) என்பதும், இவா் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிவக்குமாா் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.