சிதம்பரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரபிரபு (36). சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறாா். மேலும் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளாா்.
இவா் கடந்த 7-ஆம் தேதி இரவு சிதம்பரம் புறவழிச் சாலையில் தனியாா் குடோன் வழியாக தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த நபா் சந்திரபிரபுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினாா். மேலும், அவா் சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றாா்.
இதுகுறித்து சந்திரபிரபு அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிதம்பரம் சகஜானந்தா தெருவைச் சோ்ந்த வெற்றிச்செல்வன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

