இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொழிலாளிக்கு மிரட்டல்: ரௌடி கைது

நெய்வேலி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நெய்வேலி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மேல் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(40). இவா், வட்டம் 2-இல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே வெள்ளிக்கிழமை மதியம் மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்த தங்கசாமி, வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ராகுல் ஆகியோருடன் நின்றிருந்தாா்.

அப்போது அங்கு வந்த செடுத்தான்குப்பத்தைச் சோ்ந்த ரெளடி ராஜ்குமாா் பணம் கேட்டு கஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் ராஜ்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.