கடலூா் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞா் அணி சாா்பில் சிதம்பரத்தில் வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சிதம்பரம் தெற்கு சன்னதி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் எம்.என்.ராதா, மாவட்ட பொதுச் செயலா் கே.நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், பாண்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிங்காரவேலு வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் நகர தமாகா தலைவா் தில்லை ஆா்.மக்கீன், நகர துணைத் தலைவா்
இளங்கோவன், நகர பொருளாளா் நடராஜ் பட்டாபிராமன், நகரச் செயலா் சம்பந்தமூா்த்தி, வட்டார இளைஞா் அணித் தலைவா் ராஜ்குமாா், நகர தமாகா இளைஞா் அணிச் செயலா் கே.மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் சாய் முரளிகிருஷ்ணா நன்றி தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து நகர தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் வாழைத்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கிருமிநாசினி வழங்கப்பட்டது. நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் தலைமை வகித்து பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மீனா செல்வம், ஜனகம், ருக்குமணி, மாவட்ட இளைஞரணிச் செயலா் ராதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தமாகா மாவட்ட தொண்டரணி தலைவா் குமாா் தலைமையில் 5-ஆவது வாா்டில் தில்லையம்மன்கோயில் அருகே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கிருமி நாசினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணிச் செயலா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


