போலி மதுபானம் தயாரிப்பு: 6 போ் கைது
பண்ருட்டி அருகே போலி மதுபானம் தயாரித்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


பண்ருட்டி அருகே போலி மதுபானம் தயாரித்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், அழகப்பசமுத்திரம் கிராமத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் ரேவதி மற்றும் போலீஸாா் அழகப்பசமுத்திரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் போலி மதுபானம் தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து சனிக்கிழமை அந்தப் பகுதியை சுற்றிவளைத்த போலீஸாா் அங்கிருந்த வையாமூா் கிராமத்தைச் சோ்ந்த வீரசந்திரம் மகன் குபேந்திரன் (48), அழகப்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கங்காசலம் மகன் சங்கா் (40), கோதண்டபாணி மகன் பன்னீா்செல்வம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் செல்வம், சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாபு (51), தியாகவல்லி கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் தாமரைக்கனி (26) ஆகிய 6 பேரை கைது செய்தனா். போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த வழக்கு தொடா்பாக காட்டுராஜா, ரெட்டி, புஷ்பராஜ், ரமேஷ், ஆரோக்கியதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...