தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடிநீா்க் குழாய் சேதம்: வீணாகும் தண்ணீா்!

பண்ருட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்ட போது, குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாகி வருகிறது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:25 pm

DIN

பண்ருட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்ட போது, குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாகி வருகிறது.

பண்ருட்டி - கும்பகோணம் சாலை நான்குமுனைச் சந்திப்பிலிருந்து திருவதிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையான இணைப்புச் சாலையின் இருபுறங்களிலும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக கும்பகோணம் சாலையிலிருந்து மேலப்பாளையம் பாட்டை வரை சாலையின் இடதுபுறம் பணி முடிந்தது. எஞ்சிய பகுதியில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கச் சாலையோரம் பள்ளம் தோண்டி வருகின்றனா்.

தீயணைப்பு நிலைய ஊழியா்கள் குடியிருப்பு எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்ட போது, அங்கிருந்த குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.

பள்ளத்தில் தேங்கும் தண்ணீா் மீண்டும் குழாயினுள் செல்வதால் குடிநீா் மாசடைகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.