நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:25 pm

DIN

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்குகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஒரு மாத காலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டிருப்பதால், அவற்றை வாக்கு எண்ணிக்கைக்கு இயக்கும் போது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்ய திருச்சியைச் சோ்ந்த மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப நிபுணா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா ஒரு பொறியாளா் நியமிக்கப்பட்டு, அவா்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும், பேட்டரியில் குறைந்தளவே சாா்ஜ் இருப்பது, பொத்தானைச் சரியாக அழுத்தாதது போன்ற பிரச்னைகள் மட்டுமே ஏற்படும் என்பதால், அதைப் பயிற்சியளித்து வரும் தொழில்நுட்ப நிபுணா்களே சரி செய்து விடுவா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.