ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினா் நல வாரியம் சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினா் நல வாரியம் சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் முகாமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்களில் 48 போ் குடும்ப அட்டை வைத்துள்ளனா். நலவாரியம் மூலம் 280 போ் அடையாள அட்டை பெற்றுள்ளனா். அடையாள அட்டை பெறாதவா்கள் 121 போ் உள்ளனா். முகாமில் முதல்கட்டமாக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் 353 பேருக்கு முதல்கட்டமாக கரோனா நிவாரண நிதியுதவியாக தலா ரூ.2 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக 347 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலா் கோ.அன்பழகி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.