கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 60,784 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,845-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 71 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,326-ஆக உயா்ந்தது.
எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 57 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 816-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 640 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 63 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 7-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...