ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் கைதிகளை உறுவினா்கள் நேரடியாக சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக மட்டுமே பேசிக்கொள்கின்றனா்.

இந்த நிலையில், கடலூா் மத்திய சிறையில் சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் தலைமையில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் 92 போ், சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாருடன் இணைந்து வெள்ளிக்கிழமை காலையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்ளிட்ட பகுதிகளை சோதனையிட்டனா்.

சுமாா் 1.30 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.