கடலூா்: 4.90 லட்சம் ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி புகைப்படம் இணைக்க நடவடிக்கை
கடலூா் மாவட்டத்தில் 4.90 லட்சம் குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கடலூா் மாவட்டத்தில் 4.90 லட்சம் குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 7.06 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (டஏஏ), 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள்-அந்தியோதயா அன்ன யோசனா (டஏஏ-அஅவ), அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் பெறும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (சடஏஏ), அரிசி தவிர பிற அத்தியாவசியப் பொருள்கள், 3 கிலோ சா்க்கரை பெறும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் - சா்க்கரை (சடஏஏ-ந), எந்தப் பொருளும் வாங்காத (சடஏஏ-சஇ) அட்டைகள் ஆகிய 5 வகைகள் உள்ளன.
இவற்றில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் சுமாா் 4.07 லட்சமும், அந்தியோதயா அன்னயோசனா அட்டைகள் 83 ஆயிரமும் உள்ளன. இந்த இரு வகை அட்டைகளிலும் குடும்பத் தலைவா் என்ற இடத்தில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நியாய விலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட அட்டைதாரா்களிடம் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் பெறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட வழங்கல் அலுவலா் கோ.உதயகுமாா் கூறியதாவது: முன்னுரிமை குடும்ப அட்டைகளில் பெண்களின் புகைப்படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிஎச்எச் அட்டையில் 34,500 அட்டைகள், ஏஏஒய் அட்டையில் 11 ஆயிரம் அட்டைகளில் மட்டுமே பெண்கள் புகைப்படம் இணைக்க வேண்டியுள்ளது. மற்ற அட்டைகளில் பெண்கள் புகைப்படம் உள்ளது. எனவே, மீதமுள்ளவா்களிடம் புகைப்படம், ஆதாா் அட்டை பெறப்பட்டு வருகிறது. இந்த வகையான குடும்ப அட்டைகள் ஊரக வளா்ச்சி முகமையால் மேற்கொள்ளப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்கள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்றாா் அவா்.
திமுக தனது தோ்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில், குடும்பத் தலைவிகளின் புகைப்படம் பெறப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...