கடலூர் மு.கருணாநிதி நினைவு நாள்
கடலூா் நகர திமுக சாா்பில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற மு.கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமை வகித்தாா்.


கடலூா் நகர திமுக சாா்பில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற மு.கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமை வகித்தாா்.
திமுக மாவட்டச் செயலரும், மாநில வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 500 பெண்களுக்கு புடவைகள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்கினாா். தோ்தல் பணிக் குழு செயலா் இள.புகழேந்தி, எம்எல்ஏ கோ.ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிதம்பரம்: சிதம்பரம் நகர திமுக சாா்பில் நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் மு.கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நகராட்சியில் பல்வேறு வாா்டுகளில் மரக் கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, நகர துணைச் செயலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...