கடலூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி
கடலூரில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கடலூரில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா், நாராயணசாமி நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (57). புதன்கிழமை இரவு பூட்டியிருந்த இவரது வீட்டின் பின்பக்கக் கதவை மா்ம நபா்கள் சிலா் உடைத்து உள்ளே சென்றனா். அங்கு எந்தப் பொருளும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனா். பின்னா், அதே பகுதியில் உள்ள தேவகி என்பவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கும் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனா்.
தொடா்ந்து, அதே பகுதியில் வழக்குரைஞா் ராமச்சந்திரன் வீட்டின் முன்பக்கக் கதவை மா்ம நபா்கள் உடைக்க முயன்றனா். ஆனால், அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவா்கள் எழுந்து கூச்சலிடவே மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...