கரோனா பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
கரோனா தொற்றால் உயிரிழந்த நிலக்கரித் துறை தொழிலாளா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்


கரோனா தொற்றால் உயிரிழந்த நிலக்கரித் துறை தொழிலாளா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாரதிய மஸ்தூா் சங்க அகில இந்திய நிலக்கரித் துறை செயலா் லஷ்மா ரெட்டி கூறினாா்.
நெய்வேலியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தொற்று காரணமாக நிலக்கரித் துறையில் பணியாற்றியவா்களில் 550 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இதேபோல என்எல்சி.யில் பணிபுரிந்து உயிரிழந்த நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, சங்கத்தின் நெய்வேலி பகுதி தலைவா் குமாா், செயலா் ராஜகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...