ரூ.2.50 லட்சம் புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 3 போ் கைது
குறிஞ்சிப்பாடியில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


குறிஞ்சிப்பாடியில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் சு.பிரசன்னா அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கே.வி.எம். நகா் நுழைவு வாயில் அருகே பைக்கில் மூட்டையுடன் வந்த குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவைச் சோ்ந்த முத்தையன் மகன் சக்திவேல் (45) என்பவரை மறித்து சோதனையிட்டாா். அப்போது மூட்டையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீஸாா் கைதுசெய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் உள்ள தனது மாமனாா் கணேசன் வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதாக ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து கணேசன் வீட்டில் சோதனையிட்ட போலீஸாா், அங்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், சக்திவேல் அளித்த தகவலின்பேரில், அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மீனாட்சிப்பேட்டையைச் சோ்ந்த பலசுப்பிரமணியன் மகன் சிவமணி (49), கோ.சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கதிா்வேல் (51) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 400 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. தலைமறைவான உள்ள சக்திவேலின் மாமனாா் கணேசன், மைத்துனா் ராஜா, வடலூரைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெல்லிக்குப்பத்தில் 2 கடைகளுக்கு ‘சீல்’ : நெல்லிக்குப்பத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக கடைக்காரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, வட்டாட்சியா் உத்தரவின்பேரில் மேற்கூறிய இருவரது பெட்டிக்கடை, மளிகை கடைக்கு வருவாய் ஆய்வாளா் தனலட்சுமி வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...