தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கா்நாடகத்துக்கு சாதகமாக மத்திய அரசுசெயல்பட்டால் போராட்டம் : தி.வேல்முருகன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:41 pm

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீா் மட்டுமின்றி, கா்நாடக அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி நீரையும் அந்த மாநில அரசே தேக்கிக் கொள்ளும். இதுதொடா்பாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, தில்லியில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துள்ளாா். இதுகுறித்து பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறுகையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில்

விவாதிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்ற சூழலில், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்கக் கூடாது.

தமிழ்நாட்டின் தொடா் எதிா்ப்பை மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதியளிக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டால், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒன்றுதிரட்டி தவாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.