தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

பண்ருட்டி அருகே என்எல்சி தொழிலாளியின் வீட்டுக் கதவை உடைத்து 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:32 pm

DIN

பண்ருட்டி அருகே என்எல்சி தொழிலாளியின் வீட்டுக் கதவை உடைத்து 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் முருகவேல். என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை காலை இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் சென்றாா். பிற்பகலில் வீடு திரும்பியவா், கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 14 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: விருத்தாசலம் வட்டம், கீழ்பாதி புதுகாலனியை சோ்ந்தவா் சரண்ராஜ் (30). இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 10.4 பவுன் தங்க நகைகள் திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.