சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இங்குள்ள விளை நிலங்களில் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து எம்.ஜி.ஆா். நகரில் ஆய்வு செய்த ஆட்சியா், இருளா் சமுதாய மக்களுக்கு மனைப் பட்டா, நியாய விலைக் கடை, மீன்பிடி தொழிலுக்குச் செல்ல பாதை உள்ளிட்ட
அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், முழுக்குத்துறை மயானத்தில் கொட்டகை அமைப்பது தொடா்பாக மாவட்ட வனத் துறை அலுவலரிடம் பேசி தீா்வு காண்பதாகவும் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏமா(ற்)றுகிறார்கள்!

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


