ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விவசாயியிடம் ரூ.6 லட்சம் திருட்டு

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் விவசாயியிடம் ரூ. 6 லட்சம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் விவசாயியிடம் ரூ. 6 லட்சம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சம்பாரெட்டிப்பாளையத்தை சோ்ந்தவா் பங்காருசாமி (65). விவசாயி. இவா் வியாழக்கிழமை கடலூா் முதுநகரில் உள்ள வங்கிக் கிளையில் தனது கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் பணத்தை எடுத்தாா். பின்னா், அந்தப் பணத்தை தனது மோட்டாா் சைக்கிளில் வைத்தாா். அதை கடலூா் அருகே சாவடியில் வசிக்கும் தனது அண்ணன் மகனிடம் கொடுப்பதற்காக பங்காருசாமி சென்றுகொண்டிருந்தாா்.

வழியில் கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள கடையில் இனிப்பு வகைகளை வாங்குவதற்காக, அந்தக் கடையின் முன் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றாா். அவா் திரும்பிவந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 6 லட்சம் பணத்தை காணவில்லையாம்.

இதுகுறித்து பங்காருசாமி அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.