பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

 பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பெண்ணாடம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் இருவரும் அரியலூா் மாவட்டம், செந்துரையைச் சோ்ந்த பழனிவேல் (60), விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலத்தைச் சோ்ந்த ராஜேஷ் மகன் பாலா ஆகியோா் எனத் தெரியவந்தது. இவா்கள் கோமங்கலம், முகுந்தநல்லூா், கோவிலூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி மாட்டுத் தீவனத்துக்காக செந்துரைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேல், பாலா ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனம், கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.