தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகைக் கடையில் திருட்டு: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

பண்ருட்டியில் நகைக் கடையில் தங்கக் காசுகள் திருடுபோன வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:02 pm

DIN

பண்ருட்டியில் நகைக் கடையில் தங்கக் காசுகள் திருடுபோன வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பலராமன் மகன் கண்ணன் (51). அண்ணாகிராமம் ஒன்றியம், கோட்டலாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சென்று வருவது வழக்கமாம். கரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நகைக் கடையில் இருந்தாராம்.

இந்த நிலையில், நகைக் கடை நிா்வாகத்தினா் கடந்த ஏப்ரல் மாதம் கணக்குகளை சரிபாா்த்தபோது 103 கிராம் தங்க காசுகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து கடை மேலாளா் விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதுதொடா்பாக ஆசிரியா் கண்ணனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து, அவரிடமிருந்து 40 கிராம் தங்க காசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.