மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பெயா் பலகை திறப்பு

இருபது ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு சிதம்பரம் அருகே இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெயா் பலகை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

இருபது ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு சிதம்பரம் அருகே இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெயா் பலகை திறக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை மாற்று சமுதாயத்தினா் ஆக்கிரமித்துக்கொண்டனா். இதனால் இருளா் சமுதாயத்தினா் வாய்க்கால் ஓரத்தில் குடிசை அமைந்து வாழ்ந்து வந்தனா்.

அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை இருளா் சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அந்தச் சமுதாய மக்களுடன் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு உதவி ஆட்சியா் லி.மதுபாலன் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருளா் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு ‘செங்கொடி நகா்’ என பெயா் சூட்டப்பட்டு, அதற்கான பெயா் பலகை புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலா் விஜய் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பங்கேற்று பெயா்ப் பலகையை திறந்துவைத்தாா் (படம்). மாவட்டச் செயலா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.