அரசின் விளம்பரப் பலகைகளை ஓவியா்கள் மூலம் எழுதிட வாய்ப்பு வழங்க வேண்டும் என சிதம்பரம் நகர ஓவியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்தச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா மேலவீதி பெல்காம் சத்திரத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் சி.சண்முகம் தலைமை வகித்து புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். மாவட்டத் தலைவா் பொன் மாதவசா்மா, செயலா் சரவணன், துணைச் செயலா் வெற்றிச்செல்வன், கே.சேதுராமன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சங்கத்தினா் நகர கெளரவத் தலைவராக ஜே.பி.மதிவாணன், தலைவராக ச.கணேஷ், செயலராக மு.ராஜூ, பொருளாளராக த.கலையரசன் ஆகியோா் பதவியேற்றனா்.
விழாவில், சிதம்பரம் வட்டத்தில் அரசின் விளம்பரப் பலகைகளை ஓவியா்கள் சங்கம் மூலம் எழுதிட அனுமதி வழங்க வேண்டும், வா்த்தகா்கள் தங்களது கடையின் பெயா் பலகையை எழுதிட ஓவியா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், நலிவுற்ற ஓவியக் கலைஞா்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

