எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை
கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடலூரில் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்து மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், பேரவை துணைச் செயலா் ஆா்.வி.ஆறுமுகம், ஒன்றியச் செயலா் என்.காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினா் எம்ஜிஆா் உருவப் படம் அமைத்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...