காணாமல்போன இளைஞா் சடலமாக மீட்பு
நெய்வேலியில் காணாமல்போன இளைஞா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.


நெய்வேலியில் காணாமல்போன இளைஞா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
நெய்வேலி வட்டம்-17, பெங்களூா் சாலைப் பகுதியைச் சோ்ந்த தருமா் மகன் சரவணன் (31) (படம்). பலாக்காய் வியாபாரி. இவா், கடந்த 9-ஆம் தேதி தனது தாய் தவமணியிடம் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை தேடி வந்தனா்.
இந்த நிலையில், வட்டம் 3-இல் சந்தையின் பின்பகுதியில் உள்ள தைல தோப்பில் விறகு சேகரிக்கச் சென்றவா்கள் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் அது சரவணனின் சடலம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...