மருத்துவா்கள் உண்ணாவிரதம்
கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் மருத்துவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் மருத்துவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 4 குழுக்களை அமைத்து மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவப் பயிற்சி, பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மருத்துவத் துறைகளையும் (பாரம்பரிய முறை, ஆங்கில முறை) இணைத்து ஒரே கலவை மருத்துவ முறையை 2030-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். இதற்கு ஆங்கில முறை மருத்துவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி, இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது. அதன்படி, கடலூரில் திங்கள்கிழமை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில உதவித் தலைவா் தெ.கேசவன் தலைமையில் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் கடலூா் தலைவா் எஸ்.பாண்டியன், செயலா் எஸ்.முகுந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...