மருத்துவா்கள் மோட்டாா் சைக்கிள் பேரணி
ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, இந்திய மருத்துவக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தினா்.


ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, இந்திய மருத்துவக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தினா்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் உத்தரவால் வரும் 2030-ஆம் ஆண்டு முதல் ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில முறை மருத்துவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி, இந்திய மருத்துவக் கழகத்தினா் (ஐஎம்ஏ) கடலூரில் கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில உதவித் தலைவா் தெ.கேசவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 20 மருத்துவா்கள் கடலூரிலிருந்து நெய்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா். இவா்கள், திங்கள்கிழமை நெய்வேலியிலிருந்து விருத்தாசலத்துக்கும், மறுநாள் அங்கிருந்து உளுந்தூா்பேட்டைக்கும் செல்கின்றனா். பின்னா், கன்னியாகுமரியிலிருந்து பேரணியாக வருவோருடன் இணைந்து சென்னைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...